3ஆவது வடக்கின் நீலங்களின் சமர் போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

குறித்த போட்டியானது, கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

இதன்போது, நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக புத்தளத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம்

பந்து பரிமாற்றங்கள் 

அதற்கிணங்க தமது முதலாவது இனிங்ஸிற்காக துடிப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 37.4 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் ஜெ.மதுசன் 38 ஓட்டங்களையும் கெ.கௌசிகன் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மேலும், பந்து வீச்சில் இந்துக்கல்லூரி சார்பில் அணித்தலைவர் டி. கிருசாந்தன் மற்றும் கெ. ஹரிசாந்தன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணியினர் 47.4 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வேளை நேற்றைய முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கை

பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் 

இந்நிலையில், இந்துக் கல்லூரி அணி சார்பில் தமிழவன் 46 ஓட்டங்களையும் ஹரிசாந்தன் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மத்திய கல்லூரி சார்பில் கௌசிகன் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தார்.

27 ஓட்டங்கள் முன்னிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை இன்றைய தினம் ஆரம்பித்த கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 34.2 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்கள் களையும் இழந்து 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் அணித்தலைவர் தமிழன் 16 ஓட்டங்களையும் ஜான்சன் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டதுடன் கே.நேனுசன் 4 விக்கெட்டுக்களையும் ஹரிசாந்தன் 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

94 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணியினர் 28 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.

துடுப்பாட்டத்தில் இந்துக்கல்லூரி அணி சார்பில் அணித்தலைவர் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் ஹரிசாந்தன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்துவீச்சில் மத்திய கல்லூரி அணி சார்பில் கௌசிகன் 4 விக்கெட்டுகக்ளை வீழ்த்தியதுடன் சிறந்த துடுப்பாட்ட வீரராக கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணியின் ஹரிசாந்தனும் சிறந்த பந்துவீச்சாளராக கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியின் கௌசிகனும் சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரியின் வேங்கைமாறனும் சகலதுறை வீரராக கௌசிகனும் போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியின் தலைவர் கிருசாந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.