எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களுக்கான நினைவோலை நிகழ்வும், “ஒளியின் இறுதி ஒப்பம்” கவிதைத்தொகுப்பு வெளியீடும் நூருள் ஹுதா உமர், எம்.என்.எம்.

அப்ராஸ்அண்மையில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூல் ஆசிரியருமான எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களுக்கான நினைவோலை நிகழ்வும், “ஒளியின் இறுதி ஒப்பம்” கவிதைத்தொகுப்பு வெளியீடும் இன்று மாலை மருதம் கலை, இலக்கிய வட்ட ஏற்பாட்டில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் றமிஸ் அப்துல்லாஹ்வின் தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.துஆ பிராத்தனைகளுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் நூல் பற்றிய உரையை ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி கலாப்பூசனம் ஏ. பீர்முகம்மட் நிகழ்த்தியதுடன், நினைவுரையை இலக்கிய செயற்பாட்டாளர் நவாஸ் சௌபி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எல்.எம். சலீம், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், கிழக்கு மாகாண கலை, இலக்கிய, ஊடக செயற்பாட்டாளர்கள், எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.