மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும், இந்த ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை(29) மீள ஆரம்பமாகவுள்ளன.

இது தொடர்பான விசேட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.