அரசாங்கத்தின் பொறுப்பு மக்களை அழிப்பதல்ல. அவர்களை பாதுகாப்பதாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெயை இறக்குமதியானது, தேசிய பாதுகாப்புக்கு ஒரு பிரச்சினையான காரணியாகவே நாம் பார்க்கின்றோம்.
இன்று, இந்த அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள், பயங்கரவாதத்தை விட தேசிய பாதுகாப்புக்கு மிகவும் சிக்கலானவையாக காணப்படுகின்றது.
மேலும் நாட்டினதும் மக்களினதும் தேசிய பாதுகாப்பை அழிக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறி வருகின்றது.
அரசாங்கங்களின் பொறுப்பு மக்களை அழிப்பது அல்ல, அவர்களை உயிருடன் வைத்திருப்பது என்பதை நான் அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அத்துடன் புற்றுநோய் ஏற்படக்கூடிய தேங்காய் எண்ணெய் மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் வரை நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசதேசிய பாதுகாப்பு
இணைந்திருங்கள்