நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கு இடையில் இன்று கலந்துரையாடப்படவுள்ளன.

இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது காணப்படும் நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது