ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்கக்கூடிய சர்வ வல்லமையும் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்றது – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரவி கருணாநாயக்க, பஸில் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இல்லாது எப்படி நாட்டை ஆள்வது என சிலர் கேட்கின்றனர். எம்மால் முடியும். திறமையானவர்கள் எம்முடன் இருக்கின்றனர். என்றுமில்லாதவாறு சிறப்பானதொரு ஆட்சியை வழங்ககக்கூடியதாக இருக்கும்.

எமது ஆட்சி ஊழல் அற்ற ஆட்சியாகவே அமையும். ஊழல் அற்றவர்களை தண்டிக்ககூடிய தகைமை ஊழல் அற்றவர்களுக்கே இருக்கின்றது. நாம் எந்தவொரு மோசடியிலும் ஈடுபட்டது கிடையாது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளும் தேவையில்லை. எனவே, மாற்றம் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாகியுள்ளது.” – என்றார்.