ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரூபா வருமானம் கிடையாது என்ற காரணத்தினால் மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மாதங்களில் வருடாந்த பணவீக்கம் 40 வீதம் வரையில் உயர்வடையலாம். ஆறு வார காலத்திற்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தி, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட உள்ளது.
மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கும் போது போராட்டங்கள் வெடிப்பது நியாயமானது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்