அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ளது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
அதன்படிஇ பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும்இ டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதற்கமையஇ மூன்று போட்டிகள் கொட்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
மூன்றாவது ரி20 போட்டி கண்டிஇ பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இணைந்திருங்கள்