இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து இந்திய அணிக்கு தேர்வானவர். இவருடைய சகோதரர் க்ருனால் பாண்டியாவும் இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருக்கும் ஆல்ரவுண்டர் தான். இருவரும் தற்போது மிக மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எப்பொழுதுமே இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.தற்போது அவர் பகிர்ந்த புகைப்படத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வெளிநாட்டில் பயணம் செய்தபடியும் அப்போது சன்கிளாஸ், கௌபாய் தொப்பி அணிந்தபடியும் இருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் பளபளப்பான மிக அரிதான பச்சை நிற மரகதங்கள் பொறிக்கப்பட்டுள்ள படேக் பிலிப் நவ்ட்டில்ஸ் பிளாட்டினம் 5711 வாட்ச் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தில் 32 பக்கோட் வெட்டு மரகதங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் உயர்ந்த தொழில்நுட்பம் வாய்ந்தவை. கடிகாரத்தில் உள்ள மரகதங்கள் மணிநேர குறிப்பான்களாக இருக்கிறது. இது அடர் சாம்பல் நிற டயலுடன் வேறுபடுகின்றன. 5711 வாட்ச் ஆனது ஆஃப் கேட்லாக் வகைகளை கொண்டுள்ளது. டார்க் டயல் செய்யப்பட்ட கடிகாரங்களில் இதுவும் ஒன்றாகும்.

தற்போது பாண்டிய கையில் கட்டியிருக்கும் கடிகாரம் நவ்ட்டில்ஸ் வரம்பை சேர்ந்த அனைத்து கடிகாரங்களையும் போன்றே தேதி 3 மணி இருக்கும் இடத்தில் வைக்கப்படுகிறது. 5711 வரம் என்பதே அரிதான ஒன்றாகும் அதிலும் குறிப்பாக அடர் சாம்பல் நிற டயல் செய்யப்பட்ட மரகத மாடல் இன்னும் அரிதான மாடல்களில் ஒன்றாகும்.

கைக்கடிகாரத்தின் விலை 5 கோடி என ஆச்சரியப்படுபவர்களில் ஒருவராக இருந்தால் 55 மில்லியன் டாலர் வரையிலும் வாட்ச்கள் இருக்கிறது. படேக் பிலிப் என்ற கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உற்பத்தி செய்யும் நிறுவனமானது சுவிட்சர்லாந்தில் 1839 ஆம் தொடங்கப்பட்டது.