மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சட்டை அணியாவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார்.

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டின் போது, புடினை விட நாம் கடுமையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட அவரைப்போலவே சட்டை அணியாமல் குதிரை சவாரி செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கிண்டலடித்திருந்தனர்.

துர்க்மெனிஸ்தானுக்கு விஜயம் செய்த புடினிடம் இது குறித்து கேள்வியெழுப்பி போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மேற்கத்திய தலைவர்கள் மதுவை துஷ்பிரயோகம் செய்கிறார்கள், விளையாட்டுகளில் ஈடுபட மாட்டார்கள் என்று பதிலளித்தார்.

அவர்கள் இடுப்புக்கு மேலே அல்லது கீழே எப்படி ஆடைகளை அவிழ்க்க விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எந்த விடயத்திலும் ஒரு அருவருப்பான காட்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அழகாக தோற்றமளிக்க, மது மற்றும் பிற கெட்ட பழக்கங்களை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துவது, உடற்பயிற்சி செய்வது மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.