பிரித்தானியா-சீனா இடையிலான உறவுகளின் “பொற்காலம்” என்பது தற்போது முடிந்துவிட்டது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார். பிரித்தானியா மற்றும் சீனா இடையிலான பொற்காலம் என்ற சொற்றொடர் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த சொற்றொடர் சீனாவுடனான முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூனின் நெருங்கிய பொருளாதார உறவுகளுடன் தொடர்புடையது. ஆனால் அடுத்தடுத்த காலகட்டத்தில் லண்டனுக்கும் பெய்ஜிங்க்கும் இடையிலான உறவுகள் மோசமடைய தொடங்கின.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தங்கள் நாட்டிற்கும் சீனாவிற்கும் இருந்த உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

பிரதமர் ரிஷி சுனக் டோரி தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் பதவியேற்றதிலிருந்து சீனா மீதான பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கடுமையாக்குவது தொடர்பாக எழுந்த அவரது எண்ணங்களுக்கு டோரி பின்வரிசை உறுப்பினர்களிடமிருந்து அழுத்தத்தை எதிர்கொண்டார்.

பிரித்தானிய தலைநகர் லண்டலில் லார்ட் மேயர் விருந்துக்கு ஆற்றிய உரையில் பிரித்தானியா-சீனா இடையிலான உறவுகளின் “பொற்காலம்” முடிந்துவிட்டது என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இது சீனாவில் கடுமையான கோவிட் பூட்டுதல் சட்டங்களுக்கு எதிராக வார இறுதியில் நடந்த போராட்டங்களுக்கு பிறகு வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஷாங்காயில் நடந்த இந்த போராட்டத்தை செய்தி சேகரிக்கும் போது பிபிசி பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார், அத்துடன் காவல்துறையால் அடித்து உதைக்கப்பட்டு பல மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் சீனா எதிர்ப்புகளை எதிர் கொண்ட போது “பிபிசி பத்திரிகையாளரை தாக்குவது உட்பட மேலும் ஒடுக்க செயல்களை தேர்வு செய்தது” என்று வணிகத் தலைவர்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்களின் பார்வையாளர்களிடம் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளுடன் அதிக வர்த்தகம் செய்வது சீன அரசியல் சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கும் என்ற அப்பாவியான யோசனையுடன் சேர்த்து பிரித்தானியா மற்றும் சீன உறவுகளின் பொற்காலம் முடிந்தது என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார்.

இருப்பினும், உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை அல்லது காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது என்று வலியுறுத்தினார்.

இராஜதந்திரம் மற்றும் ஈடுபாடு உட்பட இந்த கூர்மைப்படுத்தும் போட்டியை நிர்வகிப்பதற்கு” கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பிரித்தானியா வேலை செய்யும் என்று அவர் சுனக் கூறினார்.

அத்துடன் இது நமது போட்டியாளர்களுக்கு எதிராக நிற்கும் சொல்லாட்சி மட்டுமல்ல வலுவான நடைமுறைவாதத்துடன் கூடியது என என்று பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.