நாடு முழுவதையும் இரத்த வெள்ளத்தில் நனைத்த கொலைகாரன் பிரபாகரன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் பால் சோறு சாப்பிட்டு, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய இந்த நாட்டிலுள்ள சிலர், அந்த பிரபாகரனை அழிப்பதற்கு தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்ஷவின் மரணத்திற்காக காத்திருப்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச அடுத்த ஜென்மத்தில் கூட இந்த பூமியில் பிறக்கக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவிடம் குறைபாடுகள் இருந்தபோதும் இந்த நாட்டிற்கு முக்கியப் பணியை ஆற்றிய வரலாற்று நாயகன் என்று தான் கருதுவதாகத் தெரிவித்த விமலவீர திஸாநாயக்க அத்தகைய ஒரு நபர் இறக்கும் சந்தர்ப்பத்தை ஆவலாக சிலர் எதிர்பார்த்திருப்பது துரதிஷ்டமான நிகழ்வாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விமலவீர திஸாநாயக்க மேலும் கூறுகையில், மிருகம் ஒன்று செத்தாலும் அதற்கு தான் சந்தோசப்படும் மனிதனல்ல என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்த தினத்தன்று பலர் பட்டாசு கொளுத்திய போதும் தான் அவ்வாறு செய்யவில்லையென்றும் ஒரு மனிதனின் மரணம் மகிழ்ச்சியான நிகழ்வு அல்ல என்றும் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச தம்மிடம் நேற்றுமுன்தினம் பேசியதாகவும் அவர் மிகவும் நலமுடன் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
இணைந்திருங்கள்