ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று முழு நாடும் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதிக்கு மக்கள் அடித்தளம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த அவல நிலைக்கு முடிவு கட்ட அனைத்துக் கட்சி ஆட்சியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்புடன் அமெரிக்கா செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கத் தயார் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதியை அனாதரவாக ஆக்கும் நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரங்களை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார்.
இணைந்திருங்கள்