இயல்பாகவே ஒரு சிலர் ஒரு கால் மேல் இன்னொரு காலை போட்டு உட்காருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வாறு உட்காருவதால் பல விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றை பற்றி இங்கு காண்போம்.

கால் மேல் கால் போட்டு உட்காருவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மேலும் இடுப்பு எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் கால் மேல் கால் போட்டு உட்காருவதை அறவே தவிர்க்க வேண்டும்.

அத்தோடு, கால் மேல் கால் போட்டு உட்காருவதால் மூட்டு மற்றும் முழங்கால் பிரச்சினை ஏற்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காருவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றுக்குள் இன்னொரு உயிரைச் சுமக்கும்போது, உங்கள் உடல் பல உள் மாற்றங்களைச் சந்திக்கிறது.

எனவே இந்த சமயத்தில் கால் மேல் கால் போட்டு உட்காருவதால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.