அக்கரைப்பற்று பிரதேசத்தில் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் பெற்றோல் மற்றும் டீசல்களை பதிக்கி வைத்து கூடிய விலைகளுக்கு விற்பனை செய்து வருவதாக பேசப்படுகின்றது.
பணங்களை பெற்று வாகனங்களுக்கு மேலதிகமாக பீப்பாய்களிலும், போத்தல்களிலும் பெற்றோல் மற்றும் டீசல் வழங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.
எரிபொருளை விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காவிடின் எரிபொருள் விநியோகிப்பதில் பாரிய சிக்கள்களை சந்திக்க நேரிடும்.
பல நாட்களாக உணவு மற்றும் ஓய்வின்றி வரிசையில் நின்றிருந்ததாலும் குறித்த எரிபொருளை கொள்வனவு செய்ய முடிய வில்லை என மன வேதனையுடன் அதிகமானவர்கள் திரும்பி செலவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
சண்டியர்களும், போதைப் பாவணையில் உள்ளவர்களும் எரிபொருள் நிலையத்தை சூழ்ந்து பணம் பெற்று வரிசைப்படுத்துவதையும் அவதானிக்க முடிகிறது.
எரிபொருள் விநியோகிஸ்தர்கள் பல நாட்களாக வரிசையில் நின்றாலும் ஒழுக்கமற்று இடைநடுவில் வரும் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் , தெரிந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது.
ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் 3000 ருபாய் தொடக்கம் 4000 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகள் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்துக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறான முறைப்பாடுகளை அவதானித்து வரும் ; சுதந்திர ஊடக கண்காணிப்பு மையம். எரிபொருள் அமைச்சர் மற்றும் எரிபொருள் கூட்டுதாபன தலைவர் ஆகியோரை சந்தித்து முறைப்பாடுகளை கையளிக்க இருப்பதாகவும் இச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து பதுக்கல் எரிபொருள் வாங்குவதை ஒரு வாரத்திற்காவது அனைவரும் நிறுத்தி திருட்டை ஒழிக்க ஒத்துழைப்போம் .!
இணைந்திருங்கள்