நாடாளுமன்ற பொலிஸ் பிரிவில் பெண் பொலிஸ் கான்ஸ்டள் ஒருவருக்கு பலவந்தமாக நெற்றியில் முத்தமிட்ட பொலிஸ் சார்ஜன்ட் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் கெமின்த பெரேரா முன்னிலையில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
எல்பிட்டியைச் சேர்ந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கடமை நிமித்தம் நாடாளுமன்ற பொலிஸ் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
நெற்றியில் முத்தம்
இதன்போது படிகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் பின்னால் வந்து தமது தலையை பிடித்து அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரின் இந்த செயற்பாடு தமக்கு அச்சத்தையும் அதேபோல் வெட்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளதாகவும் பணியகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்