காத்தான்குடியில் ஒரு இலட்சம் மரம் நடும் வேலைத் திட்டம் ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தினால் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பிரதான வைபவம் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தாருள் அர்க்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தின் தலைவர் எம்.வை.சரீப் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
பொது மக்களின் உதவியோடு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள் போன்றவற்றின் போது அவர்களின் நினைவாக மரங்களை அன்பளிப்பு செய்யுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன
காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எஸ்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி நகரசபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன், விவசாய விரிவாக்கத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பேரின்ப ராசா, தென்னை அபிவிருத்தி சபை பிராந்தி முகாமையாளர் ரி.எம்.ஹரீஸ், காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நழீமி,
ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தின் செயலாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான கமால்டீன் உட்பட காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஒக்சி காடன் சுற்றுச் சூழல் பசுமைக் கழகத்தின் உறுப்பினர்கள், பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இணைந்திருங்கள்