கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தது தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம்.

இன்று 3/8/2024 அன்று மட்டக்களப்புக்கு
விஜயம் செய்த அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களை மட்டக்களப்பு “ஈஸ்ட் லகூன்” உல்லாச விடுதியில் சந்தித்தார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் கருத்து.
க்களை தெரிவித்த தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிய தவிசாளர் யு.எல். எம் .என். முபீன் மற்றும் அவ் அமைப்பின் உப தலைவர் ஜாபீர் நழீமி இருவரும் காத்திரமான கருத்துக்களை முன்வைத்தனர்.

முதலில் கருத்து தெரிவித்த தொழில் வாண்மையாளர் ஒன்றியத்தின் தவிசாளர் முபீன்
அண்மையில் வடமாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஆகிய நீங்கள் 13 ஆம் திருத்தத்தை போலீஸ் அதிகாரம் இன்றி நடைமுறைப்படுத்தப் போவதாக கூறி இருந்தீர்கள்.

உண்மையில் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியதை முஸ்லிம் சமூகம் வரவேற்கிறது.
ஆனால் நான் பின்னால் சொல்லப் போகின்ற பல்வேறு காரணங்களினால் இத்தகைய தீர்வுகள் வழங்கப்படுவது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக முடிந்து விடுமா? என்று அச்சம் முஸ்லிம்களுக்குள்ளே தொடராக இருந்து வருகின்றது காரணம் இங்கே பதவியில் இருக்கின்ற தமிழ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள்கிழக்கு மாகாணத்தில், வடமாகாணத்தில் முஸ்லிம்களை நசுக்கும் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர்.

தற்போது அரசியல் யாப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்க நடைமுறைகளில் ஊடாக அதாவது பிரதேச செயலகம், கச்சேரி முறைமைகளின் ஊடாக அவ் அதிகாரங்களை பயன்படுத்தியே முஸ்லிம்களின் உரிமைகளை தொடர்ந்துேச்சியாக இந்த தமிழ் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.

எனவே இவர்களுக்கு அதிகாரங்களை கொடுக்கின்ற போது அவ் அதிகாரங்களைக் கொண்டு மேலும் முஸ்லிம்களை அவர்கள் நசுக்குவார்கள் என்ற அச்சம் முஸ்லிம்களை பீடித்துள்ளது. எனவேதான் 13 வது திருத்தம் அமுல்படுத்தப்படுகின்ற போது முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்ற கேள்வியை அதிமேதகு ஜனாதிபதியாகிய உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கின்றோம்? இனப்பிரச்சினைக்கான தீர்வை நீங்கள் வழங்க வேண்டும்.
ஆனால் அத்தீர்வு வழங்குகின்ற போது முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முஸ்லிம்களுக்குரிய பொருத்தமான தீர்வையும் நீங்கள் வழங்க வேண்டும் என்று உங்களை மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த விடயமாக தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் பாரிய நிலப்பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 27% வாழ்கின்ற முஸ்லிம்கள் அவர்கள் வெறுமனே 46 சதுர கிலோமீட்டர் காணியையே பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பிலே 2854 சதுர கிலோமீட்டர் மொத்த காணியில் தமிழ் பிரதேசத்தில் 2808 சதுர கிலோமீட்டர் அவர்களுக்கு உரியதாக காணப்பட நான்கு பிரதேச செயலகங்களைக் கொண்ட முஸ்லிம்கள் வெறுமனே 46 சதுர கிலோ மீற்றர் காணிகளையே பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. இது மொத்த காணி அளவில் 1.5 வீதம் ஆகும்.

2023 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட புள்ளி விவர அறிக்கையின்படி முஸ்லிம்களின் விகிதாசாரம் 27% ஆகும் எனவே இவ்வ27 வீதத்திற்கு மொத்தமாக முஸ்லிம்களுக்கு 770 சதுர கிலோமீட்டர் காணி உரித்துடையது
ஆனால் மட்டக்களப்பு கச்சேரி திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களின் காணி உரிமைகளை மறுத்து வெறும் 46 சதுர கிலோ மீட்டருக்குள் அவர்களை முடக்கியுள்ளது.

மேலும் ஜனாதிபதி அவர்களே
கடந்த உள்நாட்டு யுத்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் 33 கிராமங்களில் இருந்து பலவந்தமாக துரத்தி அடிக்கப்பட்டனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா போன்ற பிரதேசங்களில் குடியேறினர். இதனால் ஏற்கனவே அங்கு நிலவிய காணிதட்டுப்பாடு மேலும் பாரிய தட்டுப்பாட்டை அம் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தியது .

அத்தோடு 1999 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பணம் பலன ஆணைக் குழுவிற்கு புதிய பிரதேச செயலக கோரிக்கையை முன்வைத்த தமிழ் தரப்பினர் தங்களுக்கான ஒரு புதிய தமிழ் பிரதேச செயலகமாக கோரளை தெற்கு கிரான் பிரதேச செயலகத்தை உருவாக்குகின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு காணி இருந்த ஒரேஒரு பிரதேசமான கோரளை மேற்கு ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து ஐந்து கிராமங்களை திட்டமிட்ட அடிப்படையில் இணைத்து தங்களுக்கான பிரதேச செயலகத்தை உருவாக்கிக் கொண்டனர். ஏற்கனவே பலமான காணி தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய முஸ்லிம்களுக்கு இத்தகைய திட்டமிட்ட செயல் அவர்களின் காணியை உரிமையை மேலும் மிகப்பெரிய சிக்கலுக்கு உள்ளாகியது .

எனவே மேதகு ஜனாதிபதி அவர்களே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப 770 சதுர கிலோமீட்டர் காணியை நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எமக்கு பெற்றுத் தர வேண்டும் என்று உங்களை மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.

மேதகு ஜனாதிபதி அவர்களே அடுத்த ஒரு முக்கிய விடயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இலங்கையில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்காக 1999 ஆம் ஆண்டு பணம்பலன ஆணை குழு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது, இவ்வாணைக்குழு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து ஆறு பிரதேச செயலகங்களை உருவாக்கியது இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களில் இரண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.

அதில் ஒன்று கோரளைமத்தி பிரதேச செயலகம் ஆகும் இக்கோரளை மத்தி பிரதேச செயலகம் முஸ்லிம்களுக்கு என உருவாக்கப்பட்டதுடன் அதேவேளை கோரளை தெற்கு கிரான் பிரதேச செயலகம் தமிழர்களுக்கான உருவாக்கப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களில் கிரான் பிரதேச செயலகத்தை உத்தியோக பற்றற்ற முறையில் 620 சதுர கிலோமீட்டர் காணியை வழங்கி அப்பிரதேச செயலகத்தை இயங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அனுமதி வழங்கிய அதே வேளை முஸ்லிம்களுக்கு என உருவாக்கப்பட்ட அதாவது 240 சதுர கிலோமீட்டர் காணி பரப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோரளை மத்தி பிரதேச செயலகத்தை அதற்குரிய காணி அளவீட்டினை அளவீடு செய்யாமல் இதுவரையில் அப்பிரதேச செயலகத்தை மட்டக்களப்பு கச்சேரி மறுத்து வருவதுடன் இன்று வரை சுமார் 23 வருடங்கள் கடந்தும் இக் கோரளை மத்தி முஸ்லிம் பிரதேச செயலகம் வெறும் ஆறு சதுர கிலோமீட்டருடன் இயங்கி வருகிறது.

அரசாங்கத்தின் ஆணை குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட கோரளை மத்தி பிரதேச செயலகத்தை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மறுத்து வருவதுடன் 2000 ஆண்டு இச்செயலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை அமல்படுத்தாமல் இழுத்தடித்து முஸ்லிம்களின் காணி உரிமையை இந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மறுத்துவருகிறது.

இதுவரையில் 9 அரசாங்க அதிபர்கள் அமைச்சரவை தீர்மானத்தை மறுத்து அரசாங்கத்தின் ஆணைக் குழுவின் சிபாரிசெய்யும் மறுத்து முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஜனாதிபதி, பிரதமர் என பலரை சந்தித்தும் இதுவரை இந்த அநியாயத்துக்கு முடிவு கிடைக்கவில்லை எனவே மேதகு ஜனாதிபதி அவர்களே உங்கள் காலத்திலாவது இந்த பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என்று ஜனாதிபதியை உருக்கமாக வேண்டிக் கொண்டார்.

இதன் போது முபீன் கோரிய கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி பதில் அளித்தார் ஜனாதிபதியின் விளக்கத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சகலருடன் கலந்துரையாடி தீர்வை வழங்கு எதிர்பார்ப்பதாகவும் மற்றும் ஏனையவிவகாரங்கள் தொடர்பில் தேர்தல் முடிந்ததன் பின்னால் மீண்டும் வருகை தந்து எல்லோரிடமும் கலந்துரையாடி இதற்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த தொழில் வாண்மைய்யாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் உப தலைவரான அஷ்ஷெய்க் ஜாபிர் நளீமி
காத்தான்குடியின் எல்லை பிரச்சினைகள் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றன இவ் எல்லைகள் தொடர்பில் தெளிவான மூன்று வர்த்தமாணி அறிவித்தல்கள் இருந்தும் இரண்டு பக்க எல்லைகளிலும் முஸ்லிம்களின் காணி அடாத்தாக ஏனைய பிரதேச செயலகங்களால் கைப்பற்றப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகிறது . பாரிய காணித்தட்டுப்பாடு எதிர் நோக்கும் காத்தான்குடிக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

எனவே இவ் எல்லை பிரச்சனையை தீர்த்துத் தருமாறு மேதகு ஜனாதிபதி அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் காத்தான்குடி பிரதேச சபை நகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட வேளையில் காத்தாங்குடியின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அண்மையில் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்ட” உருமய” வேலைத் திட்டத்தில் காத்தான்குடியில் பாரிய காணிப் பிரச்சினையை எதிர்நோக்கும் முஸ்லிம்களுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

எனவே புதிய காத்தான்குடியை ஒரு பிரதேச சபையாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதோடு அப்பிரதேச சபையுடன் காத்தான்குடிக்கு நெருக்கமாக உள்ள முஸ்லிம் கிராமங்களான பூனொச்சிமுனை ,மஞ்சந் தொடுவாய்,பாலமுனை போன்ற கிராமங்களையும் இணைத்து புதிய காத்தான்குடி பிரதேச சபை ஒன்றை உருவாக்கித் தருமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் காத்தான்குடி தென்கிழக்கு ஆசியாவிலேயே சன அடர்த்தியைக் கொண்ட பிரதேசமாகும். இப்பிரதேசத்திற்கு கழிவு முகாமைத்துவம Suwerage வேலைத்திட்டம் அங்கீகரிக்கப்பட்ட போதும் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை.

மேதகு ஜனாதிபதியாகிய நீங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்திருந்தீர்கள். தயவு செய்து இந்த கழிவு நீர் திட்ட முகாமைத்துவ செயற்திட்டத்தை காத்தான்குடிக்கு வழங்கி உதவுமாறு தங்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஜனாதிபதியிடம் தொழில் வான்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிய தலைவர் முபீன் நேரடியாக கையளித்தார்.

மேற்படி மகஜரில் பூனொச்சிமுனை மீனவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்கள் தொடர்ச்சியாக கொள்ளையிடப்படுவது தொடர்பிலும் ஜனாதிபதியின் தீர்வை கோரியதுடன் காத்தான்குடியின் வருடாந்தம் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கான முறையான வடிகால் வேலைத் திட்டம் ஒன்றை அமைத்துத் தருமாறும் அம்மகஜரில் கோரப்பட்டிருந்தது.

தொடர்ந்து மட்டக்களப்பு ,ஏறாவூர், கல்குடா பிரதேசங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு அப்பிரதேச பிரமுகர்களால் முன்வைக்கப்பட்டன.

Reporting by
NM.Mohamed Faiz
Kattanakudy