எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவினர் எவரும் போட்டியிட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. |
இவ்வாறான நிலைமையில், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட ராஜபக்ச ஒருவர் இருப்பாரா எனக் கூற முடியாது. அந்தளவுக்கு ராஜபக்சவினர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது அதேவேளை சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர், ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாமல்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். மேலும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெறபோவதில்லை. கீழ் மட்டத்திற்கு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே தற்போது செய்ய வேண்டிய சிறந்த பணி. கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் அநீதிக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது மக்களுக்கு ராஜபக்சவினர் மீதுள்ள கோபம் தணியலாம் எனவும் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
இணைந்திருங்கள்