உலகக்கிண்ண ரி – 20கிரிக்கெட் போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.
இந்த ஆட்டம் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடக்க உள்ளது.
ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் வெற்றிநடை போட்டது.
இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்த ஆட்டத்திலும் தோற்றால் ஆஸ்திரேலிய அணியின் அரைஇறுதி கனவு தவிடுபொடியாகி விடும். இதனால் அந்த அணி வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியுள்ளது.
இணைந்திருங்கள்