இதயம் நம் உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. பிறந்தது முதல் இறக்கும் வரையில் இடைவெளி இன்றி நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு. அந்த இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இதய நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள், நம்மில் பலர் இதய நலத்திற்காக வாழ்வியல் மாற்றம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறும் பொழுது, எனக்கு நேரமில்லை, நிறைய வேலைகள் இருக்கிறது, என் உடல் நலத்திற்காக அதிக நேரம் என்னால் ஒதுக்க முடியவில்லை, இந்த வேலை எல்லாம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பல சமாளிப்பு வார்த்தைகளை கூறுவதை நாம் கேட்கிறோம்.
இதயம் நம் உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. பிறந்தது முதல் இறக்கும் வரையில் இடைவெளி இன்றி நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு. அந்த இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இதய நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள், நம்மில் பலர் இதய நலத்திற்காக வாழ்வியல் மாற்றம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறும் பொழுது, எனக்கு நேரமில்லை, நிறைய வேலைகள் இருக்கிறது, என் உடல் நலத்திற்காக அதிக நேரம் என்னால் ஒதுக்க முடியவில்லை, இந்த வேலை எல்லாம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பல சமாளிப்பு வார்த்தைகளை கூறுவதை நாம் கேட்கிறோம்.
சரி, அதிக உடற்பயிற்சி, முழுமையான உணவு கட்டுப்பாடு, தியானம் மனம் தளர்த்தும் பயிற்சிகள் என்று பலவற்றையும் முறைப்படி கற்றுக்கொண்டு என்னால் பின்பற்ற முடியவில்லை என்று கூறும் நண்பர்களுக்காக, உங்கள் இதயத்தைக் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில சின்ன சின்ன மாற்றங்களை கீழ்வரும் கட்டுரையில் காணலாம்.
காலை உணவு:
காலை உணவு என்பது நாம் தவிர்க்கக் கூடாத அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் காலை உணவை நல்ல ஆரோக்கியமானதாகவும் குறைந்த அளவிலும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் நாம் பொதுவாக சாப்பிடக்கூடிய அதிகமான மாவுச் சத்துள்ள பொருட்கள், எண்ணெயில் செய்த பொருட்கள், அதிக இனிப்பு கொண்ட பொருட்கள் போன்றவற்றை முழுமையாய் தவிர்க்க வேண்டும். காலை உணவில் முழு தானியத்தால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவை அதாவது இட்லி, தோசை, சப்பாத்தி, முழு தானிய கஞ்சி, முழு கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு போன்று ஏதாவது ஒன்றினால் செய்த காலை உணவை சாப்பிடுவது நல்லது.
மேலும் காலை உணவில் அதிகமான அளவில் நார்ச்சத்து இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு நம்முடைய கெட்ட கொழுப்பினால் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் அது ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து இதனால் இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் நீடித்த அழற்சிகள் உடலில் இருந்தால் அவற்றை சரி செய்யவும் நார்ச்சத்து உணவுகள் நமக்கு உதவுகின்றன. எனவே காலை உணவை ஆரோக்கியமானதாக நார்ச்சத்து நிறைந்ததாக முழு தானியம் கொண்டதாக குறைந்த அளவாக இருந்தாலும் எடுத்துக் கொள்வது சிறந்தது. அத்துடன் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தனிமையை தவிர்த்தல்:
இன்று பலர் வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளை செய்யக்கூடிய நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இது பலருக்கும் அனுகூலமாக இருந்தாலும் அது மனதின் ஆரோக்கியத்தை குறைக்க கூடியதாகவும் அதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்க கூடியதாகவும் இருக்கிறது என்பது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள். என்னுடைய வேலைகளை எல்லாம் நான் வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் செய்கிறேன் அதை தாண்டி சமூக ஊடகங்களில் ஆழ்ந்திருப்பதும் ஏதேனும் சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீட்டிங்குகளையும் ஜூம், வாட்ஸ் அப், கூகுள் மீட் போன்றவற்றிலேயே நான் செய்து விடுகிறேன் என்று கூறுபவராகவும் நீங்கள் இருந்தால் இதை நீங்கள் நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த முறையில் செயல்படும் பொழுது குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தனிமையான உணர்வும் இதனால் மன அழுத்தமும் ஏற்படும். இது இதய நலத்தையும் பாதிக்கிறது. எனவே அவ்வப்பொழுது சில மீட்டிங்குகளை நேரில் சென்று மனிதர்களை சந்திக்கும் விதமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நண்பருடன் சென்று காபி அல்லது டீ அருந்துவது, நண்பர்களுடன் மதிய உணவு வெளியில் சென்று உண்பது, மாலை நேரங்களில் ஒரு சிறிய நடைபயிற்சியை மேற்கொள்வது அந்த நேரத்தில் பலவிதமான மனிதர்கள் வந்து போகக்கூடிய இடங்களில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது, பொருட்கள் வாங்க அவசியம் இல்லை என்றாலும் கடைவீதிகளில் அல்லது மால்களில் சிறிது நடந்து விட்டு புதிய மனிதர்களையும் பொருட்களையும் பார்த்து வருவது போன்ற சிறுசிறு நிகழ்வுகளை நம் அன்றாட நடைமுறையில் புகுத்திக் கொண்டால் மனநலம் மட்டுமின்றி இதய நலனையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
மனம் உடல் தளர்த்தும் தியானம்:
மனம் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அலைநீளத்தில் செயல்படுகிறது. பெரும்பாலான நேரம் நம் மனம் பீட்டா அலையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே இந்த அலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம் உடல் தளர்வாக இருப்பதில்லை. நம் உடல் தசைகள் ஒரு கடினத் தன்மையுடன் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்கும். உடல் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது தான் நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உடலின் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது, அது அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக ரத்தஅழுத்தம், மற்றும் மூளை இதயத்திற்கான ரத்தக்குழாய்களில் அடைப்பு போன்றவற்றை தவிர்க்க உதவுகிறது. உடல் தளர்வாக இருக்க வேண்டும் என்றால் அது மனதினால் மட்டுமே முடியும். மனம் தளர்வாக இருக்கும் பொழுது மட்டுமே அதை உடலும் கற்றுக் கொள்கிறது. எனவே மனதைக் கொண்டு தா ன் உடலை தளர்த்த வேண்டும். மனதை தளர்த்த தியானம் நமக்கு உதவுகிறது.
இணைந்திருங்கள்