இலங்கையர்கள் விரும்பி சாப்பிடும் காலை உணவுகளில் ரொட்டியும் ஒன்று. ரொட்டிகளில் பல வகை உண்டு. இன்று நாம் இலங்கையர்களின் ஆரோக்கியமான ரொட்டியின் செய்முறையை பார்க்கலாம்.

இலங்கை ரொட்டி எப்படி தயாரிக்கலாம்?

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்

உப்பு தேவையான அளவு

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் -2

செய்முறை

பாத்திரத்தில் கோதுமை மாவு, வெங்காயம், பொடியான நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசையுங்கள்.

மா பிசைந்து 30 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்து கொள்ளவும்.

பின்னர் சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் வேகவைத்து எடுக்கவும்.

அவ்வளவுதான் சுவையான ரொட்டி தயார்.