இலங்கை விமானப்படையின் வான்வழி விதை குண்டுவீச்து திட்டத்தின் ஏழாவது கட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்கான 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வன அடர்த்தியை 27% இலிருந்து 32% ஆக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக, பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவின் ஆலோசனைக்கு அமைய, இதன் 7ஆம் கட்டம் அண்மையில் (29) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

வீரவெல இலங்கை விமானப்படை தளத்தை மையமாக கொண்டு இல 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு உரித்தான பெல் 212 ரக ஹெலிகொப்டர் மூலம் 20 தடவைகள் இந்த விதைகுண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கூலன் , வேம்பு , ஆத்தி , நாகை , புளி , பருத்தி , பாலை , வீரை , மருது , கித்துள் உற்பட 100,000 விதைகள் இதற்காக தாயரிக்கப்பட்டு வான் வழியாக வீசப்பட்டன

இந்த வேலைத்திட்டமானது, இலங்கை வன வள பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் வழிகாட்டலுக்கமைய, கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் நிறைவேற்று விவசாயப் பிரிவினால் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.