காபூலின் கட்டுப்பாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரித்தானியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்று பிரித்தானியா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் குடிமக்களை மீள்குடியேற்றும் திட்டத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் 20,000 பேருக்கு வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

பெண்கள், சிறுமிகள், மத மற்றும் பிற சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வேல்ஸ் உள்ளூர் அரசாங்க சங்கத்தின் தலைவர் ஆண்ட்ரூ மோர்கன், ‘வேல்ஸில் உள்ள உள்ளூர் சபைகள் தங்கள் பங்கை வகிக்க வேண்டும்’ என கூறினார்.

சமூக நீதி அமைச்சர் ஜேன் ஹட், ‘வேல்ஸ் அரசாங்கம் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிரித்தானிய அமைச்சர்களுடன் இணைந்து வீடுகளை வழங்குவதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறது’

ஆனால், ஏற்பாடுகளைச் செய்வதற்கு பிரித்தானியா அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நிதி தேவைப்படும்’ என கூறினார்.