தனியாகவோ,கூட்டணியாகவோ தேர்தலை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலை பிற்போடும் அரசின் முயற்சியை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

” எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் சக்தி எமக்கு இருக்கின்றது. தனியாகவோ, கூட்டணியாகவோ களமிறங்க நாம் தயார். எமது கட்சியுடன் இணைய முக்கிய பிரமுகர்கள் பலர் தயாராக உள்ளனர். கட்சியைவிட்டு வெளியேறியவர்களை விடவும் வரவுள்ளவர்கள் சிறந்தவர்கள்.” – என்றார் மைத்திரி.

அதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், அமைச்சு பதவிகளை கைவிட்டால் நாளை வேண்டுமானாலும் மீண்டும் கட்சியில் இணையலாம் என சு.க. பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.