பாறசாலை போலீசாரின் அஜாக்கிரதையால்தான் தங்கள் மகனை இழந்து தவிக்கிறோம் என்று, ஷாரோனின் குடும்பத்தினர் கதறி அழுது குற்றஞ்சாட்டி வருகிறார்கள். விஷம் வைத்து, காதலனை கொன்ற க்ரீஷ்மாவின் உடல்நிலை ஓரளவு தேறி உள்ள நிலையில், தொடர் விசாரணையை அவரிடம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, அந்தரங்க போட்டோக்கள் குறித்த விஷயங்களை போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்ததையடுத்து, இந்த வழக்கில் திருப்பு முனை ஏற்பட துவங்கியது.

டர்னிங் பாயிண்ட்

விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை கிரீஷ்மாவின் அம்மாதான் அழித்திருக்கிறார் என்பது உறுதியானதால்தான், அதற்கு மேல் இந்த வழக்கில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.. தன்னுடைய ஜாதகத்தின்படி, முதல் கணவர் இறந்துவிடுவார், அதனால் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று க்ரீஷ்மா சொன்னபோது, அந்த ஜாதக விஷயத்தை ஷாரோன் நம்பவே இல்லையாம்.. க்ரீஷ்மாவிடம் அது சம்பந்தமாக மறுத்து பேசியுள்ளார் ஷாரோன்.. அதெல்லாம் நம்ப வேண்டாம் என்றும் எடுத்து சொல்லியும் மறுத்துவிட்டதால்தான், க்ரீஷ்மா மனம் புண்பட்டுவிடும் என்பதால், மாலை மாற்றி கொண்டதாக தெரிகிறது.

சாதகம்

கடைசிவரை ஷாரோனின் காதல் உறுதியாக இருப்பதை பார்த்துதான், அந்தரங்க போட்டோக்களை செல்போனில் இருந்து அழிக்க வேண்டும் என்று நேரடியாகவே சொன்னாராம் க்ரீஷ்மா.. அதற்கு ஷாரோன், “நான் உன்னை உண்மையாக நேசிக்கிறேன்.. போட்டோக்களை அழிக்க முடியாது” என்று சொல்லவும்தான் கொலை செய்ய முடிவு செய்துள்ளார் க்ரீஷ்மா என்கிறார்கள்… கஷாயம் குடித்த பிறகு, பச்சை கலரில் வாந்தி வந்ததாக க்ரீஷ்மாவுக்கு வாட்ஸப் அனுப்பியிருக்கிறார்.. கஷாயம் குடித்ததால் தான் அந்த கலரில் வந்திருக்கும், ஒன்றும் இல்லை சரியாக ஆகிடும் என்று சமாதானம் சொன்னதும், அப்படியே கண்ணை மூடி தூங்கிடு, ரெஸ்ட் எடு என்றும் பாசமாக சொல்லி உள்ளார்.

மழுப்பிய பெண்

அதற்கு ஷாரோன், “சரி, நீ ஒன்னும் பயப்படாதே, சரியாயிடும்” என்று சமாதானப்படுத்தி உள்ளார்.. இந்த பேச்சுக்கள் எல்லாம் நினைத்து பார்த்துதான், கடைசி நேரத்தில் உயிர் பிரியும்போதுகூட, க்ரீஷ்மாவின் மீதான தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தி கொண்டே இருந்தாராம்.. ஆனால், அந்த கஷாயத்தை பெயர் என்ன என்று கேட்டதற்கு, தனக்கு தெரியாது என்று க்ரீஷ்மா மழுப்பலாக பதில் சொல்லியும்கூட, சந்தேகம் கொஞ்சம்கூட தன் காதலி மீது ஷாரோனுக்கு வரவேயில்லை. இந்நிலையில், பாறசாலை போலீஸார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளது..

பாய்சன்

ஆரம்பத்திலேயே இந்த வழக்கில் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் வேகம் காட்டவில்லை என்று ஷாரோனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். க்ரீஷ்மா வீட்டில் ஏதோ சந்தேகத்துக்கு இடமாக தந்துள்ளார்கள் என்று போலீசில் உடனே சொன்னோம்.. ஆனால், அவர்கள் உடனடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தவோ, அவரது குடும்பத்தில் விசாரணை நடத்தவோ இல்லை.. ஷாரோனுக்கு விஷம் கொடுத்த பாட்டிலை கூட போலீசார் எடுக்கவில்லை…

ஆற்றங்கரையோரம்

அந்த பாட்டிலை ஆற்றங்கரையில் போட்டதாக க்ரீஷ்மா சொன்னதையே, எங்களிடமும் போலீசார் சொன்னார்கள்.. அதேபோல, கிரீஷ்மா வீட்டில் ஷாரோன் வாந்தி எடுத்த இடத்தையும் ஆய்வு செய்யவில்லை… நாங்கள் எங்கள் சந்தேகத்தை சொன்னபோதே, தீவிரமாக விசாரித்திருந்தால், விஷம் தந்தது தெரிய வந்திருக்கும்… அதன்மூலம் என்ன மாதிரியான சிகிச்சையை தருவது என்று யோசித்து, டாக்டர்களும் ஷாரோனை காப்பாற்றியிருப்பார்கள்..

ஹிஸ்டரி

இதைவிட கொடுமை, க்ரீஷ்மாவின் செல்போனைகூட, கைப்பற்றி ஆய்வு செய்யவில்லை.. அப்படி ஆய்வு செய்திருந்தால், ஸ்லோ பாய்சன் தந்து கொல்வது எப்படி என்பது குறித்து க்ரீஷ்மா இணையதளத்தில் தேடியதை முன்கூட்டியே கண்டறிந்திருக்கலாம்… கிரீஷ்மா கூகுள் ஹிஸ்டரியில் அதை டெலிட் செய்திருந்த பிறகுதான், சைபர் செல் உதவியுடன் குற்றப்பிரிவு போலீஸார் அந்த விஷயத்தையே கண்டறிந்திருந்தனர்.

மந்த நிலை

மொத்தத்தில் பாறசாலை போலீஸார் இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே விசாரணையில் முழுமனதோடு ஈடுபடவில்லை என்று ஷாரோன் குடும்பத்தினர் கதறி அழுது சொல்கிறார்கள்.. இதற்கு பிறகுதான், இந்த வழக்கின் விசாரணையை திருவனந்தபுரம் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது… ஆனால், தமிழக போலீசாரிடம் இந்த கேஸை ஒப்படைக்க, ஷாரோனின் அப்பா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்..

டவுட் கிளம்பியது

காரணம், திருவனந்தபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கை சிறப்பாக விசாரித்து வரும் நிலையில், திடீரென இதன் விசாரணை மாற்றப்பட்டால் அது சரியாக இருக்காது என்கிறாராம்.. ஒருவேளை இவரது எதிர்ப்புக்கு இதுதான் காரணமா? என்று தெரியவில்லை.. ஆனால், பாறசாசாலை போலீசார் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையும் வேண்டும், அப்படி போலீசாரின் மெத்தனம் இதில் இருந்தால், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்தே வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.. ஆனால், பாவம் ஷாரோன்.