முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றத்தின் போது, புதிய அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்படுவார்கள், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அமைச்சர் பதவியொன்றை பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்