கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மட்டக்களப்பு நகரையும் மண்முனை மேற்கு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலத்தின் வீதியின் ஒரு பகுதி கடந்த 3 நாட்களாக நீரில் மூழ்கியுள்ளது.

மட்டக்களப்பு நகரில் இருந்து மேற்கே மண்முனை மேற்கு பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதை இதுவாகும். இவ்வீதி ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்களின் பயணங்கள் பெரும் சிரமத்துடன் மேற்கொண்டுவருவதனை காணமுடிகின்றது.
நேற்று பிற்பகல் இவ்வீதியால் சுமார் இரண்டு அடி நீர் ஊடறுத்து செல்வதை காணமுடிகின்றது.

இதனால் முச்சக்கரவண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் மேலும் திறக்கப்படுமானால் இவ் வீதியின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து மக்களின் போக்குவரத்தும் மேலும் பாதிப்படைவதற்கு வாய்ப்புள்ளது.