மின் கட்டண உயர்வு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், மின் கட்டண உயர்வை அறிவிக்கும் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவால் வழங்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், அமைச்சரவை அமைச்சர் தனது ஓய்வு நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட முடியாது என்று தெரிவித்த அவர், நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது எனவும் அதன்படி செயற்பட வேண்டும் என்றார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக எந்த அறிவிப்புகளையும் ஆணைக்குழு விடுக்கவில்லை என்றும் வலியுறுத்தினார்.
இணைந்திருங்கள்