கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கோட்டை ஜனாதிபதி மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர். இதன்போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கொல்லும் திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்