மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமை குறித்து விசாரிப்பதற்காக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகளின் ஊடாக மக்களின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமையை கண்காணிக்கக்கூடியதாக உள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையானது ஜனநாயக சமூகத்தின் உயிர்ப்பு மற்றும் சட்டவாட்சிக்கு பாரிய அச்சுறுத்தல் என்பதே மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சட்டத்தை பாதுகாப்பதற்கும் நிலைநாட்டுவதற்கும் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, நவம்பர் 21 ஆம் திகதி காலை 10 மணிக்கு செயலாளரும், பொலிஸ் மா அதிபரும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்