நோர்வே கொடியுடன் பயணித்துள்ள சொகுசு பயணிகள் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) இன்று மதியம் 12.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலில் 900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் கண்டி, பின்னவெல, காலி போன்ற நகரப் பயணங்கள், கொழும்பின் சில முக்கிய இடங்களுக்கும், முத்துராஜவெல மற்றும் ஆற்றில் படகுச் சவாரி, விவசாயக் கிராமங்களை பார்வையிடுதல், முச்சக்கரவண்டி சுற்றுப்பயணங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், சமையல் அனுபவங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைச் சுற்றுலாக்கள் மற்றும் இலங்கையின் தேயிலை தோட்டங்கள் என்பனவற்றை பார்வையிட்டு இலங்கை சுற்றுலா அனுபவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்