கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் அண்மையில் இடம்பெற்ற மோதலின் போது தப்பிச் சென்ற 13 கைதிகள் இதுவரை சரணடையவில்லை என பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த 6ஆம் திகதி இரவு ஏற்பட்ட மோதலின் போது 50 தொடக்கம் 100 வரையான கைதிகள் முகாமிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மோதலின் பின்னர் இதுவரை 301 கைதிகள் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

மோதலில் ஈடுபட்ட 215 கைதிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மோதலின் போது தப்பியோடிய 14 கைதிகள் புலதிசிபுர மற்றும் சேருநுவர பொலிஸ் நிலையங்களில் இருப்பதாகவும், காயமடைந்த 04 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், தப்பியோடிய 13 கைதிகள் இன்னும் சரணடையவில்லை.