கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி – கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் கெதிராக 65வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அழைப்பாணை விடுக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் வழக்கு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அண்மையில் இருவர் எவ்வித காரணமுமின்றி பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்றும் கூறினர்.