புதிய நாப்தா (எரிபொருள்) விநியோகிக்கப்படாமையால் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையம், இன்று நள்ளிரவு மூடப்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

இதுவரை நப்தா கிடைக்கவில்லை என்றும் இரவுக்குள் நப்தா கிடைக்கவில்லை எனின், மின்நிலையம் மூடப்படும் என்றும் மின்சாரசபையின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொது முகாமையாளருமான அன்ட்ரூ நவமணி குறிப்பிட்டுள்ளார்.

4000 மெற்றிக்தொன் நப்தா மூலம் 165 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இன்றிரவுக்கு தேவையான நப்தா காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின்நிலையத்தை மூடும் பட்சத்தில் மின்வெட்டை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் நிலைமையை பரிசீலித்து, மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டுமா என்பதை ஆராயவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.