வலம்புரி சங்கு ஒன்றினை வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை இரவு ஆரையம்பதி 3ஆம் பிரிவில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் ஆரையம்பதியை பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து பல கோடி பெறுதியான வலம்புரி சங்கு ஒன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்