2023 ஜனவரி முதல் காகிதமல்லாத மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் செலவுகளைக் குறைப்பது தொடர்பில், உயரதிகாரிகளுடனான இணையவழி மூலமான சந்திப்பின்போது, செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மின்சார சபையின் செலவுகளைக் குறைக்க எடுக்கப்படக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் கலந்துரையாடினார்.

இலங்கை மின்சார சபையின் புதிய தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.

காகிதமல்லா மின்பட்டியலை அறிமுகப்படுத்தல் தொடர்பிலும், தெரு விளக்குகளை முறையாக பயன்படுத்துதல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டதுடன்,

இலங்கை மின்சார சபையால் செய்ய முடியாத வேலைகளை உள்ளூராட்சி சபைகளின் ஆதரவுடன் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.