ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என பிரசாரம் செய்த போதும் 37 இலட்சம் குடும்பங்கள் நிவாரண விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள போதும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர்களினால் நலன்புரி நன்மைகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விண்ணப்பங்கள் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் கூட இன்னும் நிறைவடையவில்லை. பட்டினியால் வாடுபவர்களுக்கு தகவல் வழங்குவதற்காக ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் தனியான தொலைபேசி இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது என தெரியவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வருட தொடக்கத்தில் பெருமளவிலான மறைமுக மற்றும் வருமான வரிகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்ததன் பின்னணியில், ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த வரவு செலவு திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.