இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கட்சி சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள், மற்றும் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் அடங்கலாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மைய தேர்தல்கள் அனைத்திலும் கூட்டணியாகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டதாகவும், இம்மமுறை தனித்து களமிறங்குவதன் மூலம் மற்றைய கட்சிகளது வாக்கில் வீழ்ச்சி ஏற்படுமெனவும் கனகராஜ் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார். அத்தோடு தனித்து போட்டியிடுவதன் மூலம் கட்சியின் நிலை தொடர்பில் அறிந்து கொள்ள முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் பொருளாதார சிக்கல்களுக்கு எதிர்கொள்ளும் நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது கட்சிக்கு பின்னடைவையே தருமெனவும் மேலும் கூறியுள்ளார்.