காத்தான்குடி மீராஜும்ஆப்பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியா பள்ளிவாயலில் 1990 ம் ஆண்டு ஓகஸ்ட் 03 இல் 103 சகோதரர்கள் பள்ளிவாயலில் தொழுதுகொண்டிருக்கும் போது படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் ஞாபகார்த்த நிகழ்வு இன்று காத்தான்குடியிலுள்ள இரு பள்ளிவாயல்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஹுஸைனியா பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வில் விஷேட சொற்பொழிவினை மௌலவி ரிபாஸ் முப்தி (இஹ்சானி ) அவர்களால் நிகழ்த்தப்பட்டது. விஷேட துஆ பிரார்த்தனையினை நூறானியா குர்ஆன் மத்ரஸா பணிப்பாளர் எம். ஐ .எம். முஸதகீம் நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து காத்தான்குடி 01 மீராஜும்ஆப்பள்ளிவாயலில் கத்முல் குர்ஆன் மற்றும் விஷேட துஆப்பிரார்த்தனை இடம்பெற்றன.

மேற்படி நிகழ்வுகளில் பள்ளிவாயல் நிருவாகத்தினர் , குடும்ப உறுப்பினர்கள், உலமாக்கள் ,சமூக நிறுவன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

விஷேட துஆ பிரார்த்தனையின்போது பள்ளிவாயலில் மரணித்த சுகதாக்கள் , பலஸ்தீன மக்களின் விடிவுக்காகவும் மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 Reporting by -
       NM. Mohamed Faiz 
              Kattanakudy