நாடுகடத்தலில் இருந்து தியாகம் வரை :

Ismail Haniyeh’s journey of Resistance: From exile to martyrdom

“(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.” குர்ஆன் 3:139.

மாணவர் செயல்பாடு முதல் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் வரை எதிர்ப்பின் ஒரு முன்மாதிரியான மாதிரியை வழங்கும் இஸ்மாயில் ஹனியே தியாகியாகிஇ பாலஸ்தீனத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்த தலைவர்களின் பட்டியலில் இணைந்தார்.

 

·      ·        இஸ்மாயில் ஹனியே நேற்று காலைஇ ஜூலை 31இ 2024 அன்று தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.

ஹமாஸ் போராட்ட இயக்கம் மற்றும் அதன் அரசியல் பணியகத்தின் தலைவரும் தலைவருமான இஸ்மாயில் ஹனியே ஈரானின் தெஹ்ரானில் அவர் வசிக்கும் இடத்தை குறிவைத்து நடத்திய “கோழைத்தனமான சியோனிச வான்வழி தாக்குதலில்” படுகொலை செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹனியே தெஹ்ரானுக்கு வந்திருந்தார்.

இஸ்மாயில் ஹனியே மே 23இ 1963 இல் காஸாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமில் பிறந்தார். 1948 நக்பாவின் போது அவரது பெற்றோர் அஸ்கலனிலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர்.

அவர் 1987 இல் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தில் பட்டம் பெற்றார்இ பின்னர் 2009 இல் தனது முனைவர் பட்டம் பெற்றார்.

அரசியல் ஈடுபாடு

ஹனியேவின் அரசியல் செயற்பாடு இஸ்லாமிய அமைப்பிற்குள் தொடங்கியதுஇ இது காஸா பகுதியில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் மாணவர் பிரிவு ஆகும்இ அதில் இருந்தே ஹமாஸ் எதிர்ப்பு இயக்கம் பிறந்தது.

அவர் 1983-1984 காலப்பகுதியில் தனது பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவில் உறுப்பினராக இருந்தார்இ பின்னர் அடுத்த ஆண்டு அதன் தலைவராக செயல்பட்டார்.

1989 இல்இ இஸ்மாயில் ஹனியே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் (ஐழுகு) மூன்று ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்இ பின்னர் ஹமாஸ் தலைவர்கள் குழுவுடன் லெபனான்-பாலஸ்தீன எல்லையில் உள்ள ஆயசத யட-ணுராரச நகருக்கு நாடு கடத்தப்பட்டார்.

நாடுகடத்தப்பட்டு ஒரு வருடம் கழிந்ததும் ஹனியே காஸாவுக்குத் திரும்பினார் மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் டீனாக நியமிக்கப்பட்டார்.

இஸ்ரேலிய காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1997 இல்இ அவர்இ ஹமாஸ் நிறுவனர் ஷேக் அஹ்மத் யாஸீனின் பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2004 இல் அதன் முந்தைய தலைவரான டாக்டர் அப்துல் அஸீஸ் அல்-ரன்தீஷி ஷஹீதாக்கப்பட்ட பின் காஸாவில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 2005 இல்இ அவர் “மாற்றம் மற்றும் சீர்திருத்தம்” அமைப்பை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கினார்இ இது 2006 இல் இடம்பெற்ற தேர்தலில் இரண்டாவது சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றது. சிறிது காலத்திற்குப் பிறகுஇ பிப்ரவரி 16இ 2006 அன்றுஇ பாலஸ்தீனத்தில் பிரதமர் பதவியை ஏற்க அவர் பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் அதே மாதம் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

அவர் கலீத் மஷால் ஷஹீதானத்தைத் தொடர்ந்து மே 2017 இல் ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரானார்.

இஸ்மாயில் ஹனியே ஏற்கனவே பல அரசியல் படுகொலை முயற்சிகளுக்கு முகம்கொடுத்துள்ளார். 2003 இல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை அல்-கஸ்ஸாம் படையணிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தியாக நடவடிக்கையைத் தொடர்ந்து எதிர்ப்புத் தலைவர்கள் குழுவிற்கு குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியது.

ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளம்

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தைத் தொடங்கியபோதுஇ ஹனியே தனது தோஹா அலுவலகத்தில் இருந்து இயக்கத்தின் பல தலைவர்களுடன் தொடர்புகொண்டுஇ ஹமாஸின் இராணுவப் பிரிவான தியாகி இஸ் அல்-தின் அல்-கஸ்ஸாமின் போராளிகள் இஸ்ரேலிய இராணுவ வாகனங்களைக் கைப்பற்றியதை அறிந்துஇ “இந்த வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி” செலுத்துமுகமாக ஒரு பிரார்த்தனைக்கு தலைமை தாங்கினார்.

ஏப்ரல் 10 அன்றுஇ ஹனியேவின் மூன்று மகன்கள் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் உட்பட ஆறு குடும்ப உறுப்பினர்கள்இ ஈத் அல்-பித்ரை அதன் குடியிருப்பாளர்களுடன் கொண்டாடுவதற்கு அல்-ஷாதி அகதிகள் முகாமைச் சுற்றி தமது வாகனத்தை ஓட்டிச் சென்றபோதுஇ அவர்களது காரை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஜூன் 24 அன்றுஇ அல்-ஷாதி அகதிகள் முகாமில் உள்ள அவர்களது வீட்டை குறிவைத்த இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் அவரது சகோதரி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களின் தியாகத்தின் மத்தியில்இ “எனது குடும்ப உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 60 பேர் தியாகிகளாக ஓய்வெடுக்கிறார்கள்இ பாலஸ்தீனத்தின் குழந்தைகளைப் போலவேஇ அவர்களும் வேறுபட்டவர்கள் அல்லஇ” என்று ஹனியே கூறினார்இ  எதிர்ப்புத் தலைவர்களின் பிள்ளைகளை குறிவைப்பது பாலஸ்தீன மக்களின் உறுதியை உடைக்கும் என்று ஆக்கிரமிப்பு நினைக்கிறது.

‘வெற்றியை அறிவிக்கிறோம்’

“பாலஸ்தீன மக்களின் குழந்தைகளின் இரத்தத்தை விட எனது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் இரத்தம் விலைமதிப்பற்றது அல்ல” என்று ஹனியே தனது குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டபோது கூறினார்இ அவர்களது உயிர் தியாகங்கள் இறைவனால் எமக்கு வழங்கப்பட்ட உயர் கௌரவமாகவே கருதுகிறோம் என்றார்.

2014 இல் அவர் ஆற்றிய உரை ஒன்றில்இ காஸாவில் நடந்து வரும் முற்றுகையை கண்டித்து ஆற்றிய உரையில்இ ஷஹீத் ஹனியே “நீங்கள் எங்களை முற்றுகையிடும்போதெல்லாம் வெற்றியை அறிவிக்கும் மக்கள் நாங்கள்” என்று கூறியிருந்தார். காஸா மற்றும் அதன் மக்களின் மனா உறுதியை நீங்கள் உடைக்க விரும்பினால்இ நாங்கள் கடவுளுக்கு முன் மண்டியிடுகிறோம். பாலஸ்தீனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முடிவெடுக்கும் ஒவ்வொருவரும் எமது மக்களின் செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்: நம் எதிரிகள் இவ்வுலக வாழ்க்கையை எப்படிப் போற்றுகிறாரோஇ அதே போல மரணத்தை மதிக்கும் மக்கள் நாங்கள்இ மற்றவர்கள் அரசியல் பதவிகளை மதிக்கையில்இ நாங்கள் எங்கள் தலைவர்களின் வழியில் தியாகத்தை மதிக்கிறோம். நீங்கள் விரும்பும் அனைத்து அலுவலகங்களையும் எடுத்து எங்கள் தேசத்தை எங்களுக்கு கொடுங்கள்.

وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ‌ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ‏

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (புனித குர்ஆன் 3:169)

தாஹா முஸம்மில்.