சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனவுக்கும் (M. A. Sumanthiran) இடையில் இன்றைய (10) தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச வெற்றி பெற்றால் வடக்கு, கிழக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரியவந்துள்ளது.
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்துறை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தேர்தலில் வெற்றி
மேலும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட தயார் என நாமல், சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுடன் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக நாமல் இதன்போது உறுதியளித்துள்ளார்.
தேர்தலில் வெற்றியடைந்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஒன்று உறுதி செய்யப்படும் என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்த தான் விரும்புவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து குறைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு நாமல் கேட்டுக்கொண்டதாக காசிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இணைந்திருங்கள்