ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் நாடாளுமன்ற ஆசனங்கள் தற்போது வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதனை எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
தீர்மானம்
அண்மையில் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த பின்னணியில் குறித்த இருவரும் அமைச்சு பதவிகளிலிருந்தும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்