ஊடக அறிக்கை
(10.11.2026 Thalam)கடந்த பல வருடங்களாக முடக்கப்பட்டுள்ள இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தாது விட்டதனால், மாகாண சபைகளில் தற்போது மக்களது பிரதிநிதிகள் இல்லாத நிலையில், மாகாண சபைகள் அரச அதிகாரிகளின் நிர்வாகங்களின் கீழ் செயற்பட்டு வருகின்றன. இது ஜனநாயகத்துக்கு முரண்பாடான விடயமாகும். மக்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு தகுந்த மக்களது பிரதிநிதிகளைக் கொண்டிராத மாகாண சபைகளில் மக்களால் தங்களது தேவைகளை சரிவர நிறைவேற்ற முடிவதில்லை.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலேயே மாகாண சபைகள் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களது அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்ந்திராத நிலையில் தற்போது மாகாண சபைகளையும் முடக்கி வைத்திருப்பது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும்.
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த தற்போதைய ஜனாதிபதி அவர்களுக்கு பலம் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளதால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிவருவதால், மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகும்.
எனவே, ஜனாதிபதி அவர்கள் இதனை கருத்தில் எடுத்து, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஊடக செயலாளர்
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்