இதய பிரச்சினை காரணமாக டெல்லி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மேலதிக சிகிச்கைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை), டெல்லி இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனக்கு இதயத்தில் சிறிய பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள், அவரது உடல்நிலை சீராக இருக்கின்றது. இருப்பினும் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அவரது மகனிடம் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை டெல்லி இராணுவ வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியில் உடல்நிலை சீராகவே உள்ளது. மேலதிக சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.