கொஞ்சம் ‌என்‌‌ வேதனையை‌ கேள்
அண்ணா.,..
அண்ணா என்பதின்‌அர்த்தமும்
ஆண் வர்க்கத்தின் மகிமையையும்
அறியா உலகில் ஆணாய்
பிறப்பெடுத்து விட்டோம்
என்பதை இட்டு கொஞ்சம்
வெட்கப்பட்டு கொள்ளுங்கள்….
பொம்மை கையில்
என் சாதமிட்டு கொஞ்சி
விளையாடினேன்‌ அண்ணா
எங்கள் வீட்டு வாசலில்……
வீட்டைத் தவிர பாதுகிப்பில்லை
என்பதும் பொய்யாகியதே
ஆண்டவா…..
முரட்டு உருவம் தூக்கி சென்றது
சத்தமிடாமல் என் வாயை‌ பொத்தியது
என் உயிர் பிரியும் வரை
காமம் தீர்த்தது…..
என்‌‌ உடலெல்லாம் குருதி
தண்ணீர் கேட்டேன்
துடித்தேன்
கடவுளே
கண்ணீர் தாரையாக ஓடுகிறதே
என்னில் என்ன காண்கிறான்
மூக்கை அழுத்தி மூச்சு திணறடித்து
கொன்று விட்டான்…..
இறந்து விட்டேன்…..
இப்போது சொல்லுங்கள்
பிறப்புறுப்பு வளரவே இல்லாத
என்னில் என்ன காமம் கண்டீர்கள்
ஊசி குத்தினாலே வலி பொறுத்காத
எனக்கு
அத்தனை வலி தந்த நீங்கள்
தாயின்‌ வயிற்றிலா பிறந்தீர்கள்…?
அம்மா அழுகிறாள்
என்‌ அம்மாவுக்கு என்ன ஆறுதல் சொல்வேன்
அம்மா அடித்த அடுத்த நிமிடமே
கட்டித் தழுவி முத்தமிடுவாளே
அம்மா வலிக்கிறது
மூச்செடுக்க முடிய வில்லை
அம்மா எனை‌ தூக்கு
முத்தமிடு
ஒரு முறை அம்மா……
அப்பா என்னை இந்த
உலகத்தை நம்பியா
வெளியே விட்டீர்கள்
உலகம் தந்த பரிசு
நான்‌ கசங்கி கிடக்கிறேன்
அப்பா வலிக்கிறது
கத்தி அழுகிறேன்
கேட்கலயா….?
அண்ணா அக்கா அய்யோ
எனை காப்பாற்றுங்கள்…
அதோ நான் கட்டியணைத்த பொம்மை
பத்திரமாய்…..
காலையில் நான்‌ போட்டுவிட்டட
ஆடையுடன் அழகாய் பற்றைக்குளே…..
ஆனால் நான் கசங்கிய மலராய்
உயிரற்று கிடக்கிறேன்…
அண்ணா என்னில் சுகம் காணும்
நீ
நாளை உன் மகள் உருவில்
என்னை காண்பாய்
அப்போது காமம் கொள்ளாதே
அவள் பாவம்
வலி‌ என்னோடு போகட்டும்…
அம்மா அப்பா……கவலை இல்லாமல் இருங்க…….