கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் இந்த நேரத்தில் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. எனவே, இவ்வருடம் முடிவதற்குள் நாம் நிச்சயம் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்தபோதும் இலங்கையின் பொருளாதாரம், 2021 ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்படும் என உலக வங்கி கூறியுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலாத்துறை மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளை இயல்பாக்குவதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மெதுவான உலகளாவிய மீட்சி, தொடர்ச்சியான வர்த்தகக் கட்டுப்பாடுகள், பொருளாதார வடுக்கள் மற்றும் அதிக கடன் சுமை ஆகியவை தொடர்ந்து வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.