அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 இலட்சத்து 14 ஆயிரத்து 765 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,958 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 95 ஆயிரத்து 224 ஆக உயர்ந்தது.இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,545 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்து 78 ஆயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,550 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 15 ஆயிரத்து 611 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசியை தன்னார்வத்துடன் வந்து போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Visit the COVID-19 Information Center for vaccine resources.Get Vaccine InfoLikeCommentShare
இணைந்திருங்கள்