அமெரிக்காவின் கொலராடோ எனும் மாகாணத்தில் அமைந்துள்ள Denver நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அங்கு ஒரே நாள் இரவில் 2.5 அங்குல அளவிற்கு பனிப் பொழிவு இருந்ததால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சாலையில் கொட்டிக் கிடந்த பனிக்குவியலில் கார் சக்கரங்கள் சிக்கி வழுக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு பனிக்குவியலை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.