உலகம் வெப்பமயமாதலினால் இலங்கைக்கு புதிய பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
உலகம் வெப்பமாதலினால் தீவுகளுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகம் வெப்பமயமாதல் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் வெப்பமாதலினால் மழை வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காலநிலை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள காலநிலை குறித்த அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்